/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை...துவக்கம்!:நடப்பாண்டில் 2 லட்சம் டன் இலக்கு
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை...துவக்கம்!:நடப்பாண்டில் 2 லட்சம் டன் இலக்கு
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை...துவக்கம்!:நடப்பாண்டில் 2 லட்சம் டன் இலக்கு
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை...துவக்கம்!:நடப்பாண்டில் 2 லட்சம் டன் இலக்கு
ADDED : நவ 22, 2024 01:18 AM

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு அரவை நேற்று துவங்கியது. சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆலைக்கு அரக்கோணம், சாலை, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கேபேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு டிராக்டர், லாரி வாயிலாக வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
தினமும் 1,800 முதல் 2,100 டன் கரும்பை அரவை செய்யப்படும். தற்போது 2024 -25ம் ஆண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயித்துள்ளது. இதற்காக, 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, 7ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டின் அரவையை நேற்று சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், திருவள்ளூர் மற்றும் திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சந்திரன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் நர்மதா, கரும்பு விவசாயிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கரும்பு விவசாயிகள் அமைச்சர் நாசரிடம் ஆலையை நவீனப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
கடந்த பருவத்தில் கரும்பு அனுப்பிய 1,942 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 4 கோடியே 55 லட்சம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகள் கூறியதாவது :
ஆலையில் கரும்பு அரவை குறித்து முறையான தகவல் விவசாயிகளுக்கு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அரவையின் முதல் நாளில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் கரும்பு அரவைக்கு வரும்.
நேற்று 2 டிராக்டர் மட்டுமே வந்துள்ளது. ஆலை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். கண்துடைப்புக்காக பூஜை போடப்பட்டு அரவையை துவக்கி உள்ளனர். ஆலையை நவீனப்படுத்துவது குறித்து தகவல் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.