/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது பைக் மோதி மளிகை கடை காரர் பலி
/
லாரி மீது பைக் மோதி மளிகை கடை காரர் பலி
ADDED : நவ 12, 2024 07:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேலானுார் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 59. மளிகை கடை நடத்தி வரும் இவர் நேற்று முன்தினம் காலை தன் டி.வி.எஸ்.எக்ஸ்.எல்.சூப்பர்., இரு சக்கர வாகனத்தில் மனைவி சாந்தி,48 என்பவருடன் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஈக்காடு கண்டிகை மாதா கோவில் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சேகர் பலியானார்.
புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.