ADDED : ஜூன் 14, 2025 08:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப் - 1 எழுத்துத் தேர்வு, இன்று 16 மையங்களில் நடைபெறுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு -தொகுதி - I பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, இன்று நடைபெறுகிறது. இத்தேர்வை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்களில், 4,561 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக, 22 தலைமை கண்காணிப்பாளர், நான்கு இயக்க குழு அலுவலர், துணை கலெக்டர் நிலையில் இரண்டு பறக்கும் படை குழு மற்றும் 22 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் பங்கேற்போருக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வருவோர், காலை 8:30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும்.
காலை 9:30 - 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் முடிந்தும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.