/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரூப் - 1 எழுத்து தேர்வு 1,359 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் - 1 எழுத்து தேர்வு 1,359 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூன் 15, 2025 08:06 PM
திருவளளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 16 மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வான- குரூப் - -1 முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
இதில் விண்ணப்பித்த 4,561 தேர்வர்களில், 3,202 பேர் தேர்வு எழுதினர். 1,359 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மேலும், தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுத மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும், ஒவ்வொரு தேர்வுக்கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 9:30 - மதியம் 12:30 மணி வரை நடந்த தேர்வில், 22 தலைமை கண்காணிப்பாளர்கள், நான்கு இயக்க குழு அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் இரண்டு பறக்கும் படை குழுக்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலர்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.