/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி
/
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி
ADDED : மார் 31, 2025 02:47 AM
திருவள்ளூர்:அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கான, 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
இரண்டு ஆண்டுகளாக உயர்கல்வி வழிகாட்டி வாயிலாக, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
உயர்கல்வி என்பது பல்வேறு வழித்தடங்கள் கொண்டது. அதை சரியான முறையில் தேர்ந்தெடுத்து, கல்லுாரி படிப்பை பயில வேண்டும்.
உயர்கல்வியில் உங்கள் இலக்குகளை உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும். உயர்கல்வியில் சிறப்பாக செயல்பட்டால் தான் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர்பாக, கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், தனி தாசில்தார்கள் மதியழகன், செந்தில்குமார், சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.