/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
யோகாவில் அசத்திய கும்மிடி மாணவர்கள்
/
யோகாவில் அசத்திய கும்மிடி மாணவர்கள்
ADDED : ஜன 29, 2025 12:35 AM

கும்மிடிப்பூண்டி:கோவையில், சத்குரு யோகாஸ்ரமம் அறக்கட்டளை சார்பில், இம்மாதம், 25ம் தேதி, 17வது தென் இந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன.
வயது வாரியாக, ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 850 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி கைரளி யோகா மையத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.அனந்து, 11, ஆண்கள் பிரிவிலும், மாணவி எம்.கே.லத்திகாஸ்ரீ, 13, பெண்கள் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அவர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் வென்ற இருவரையும், பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி கவுரவித்தனர்.

