நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட கும்மிடி எம்.எல்.ஏ.,
நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட கும்மிடி எம்.எல்.ஏ.,
ADDED : மே 23, 2026 04:43 AM

அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார், வெற்றி பெற்றவுடன் நேற்று முதன்முறையாக பூண்டி ஒன்றியம், கச்சூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்கு, மின்வசதி இல்லாததை பார்த்த அவர், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உடனே மின்வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தினார்.
பின், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று, நோயாளிகளிடம் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதா என கேட்டறிந்தார். சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., புதிதாக திறக்கப்பட்ட அறிவியல் ஆய்வகம் திறக்காமல் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து, பூண்டி ஒன்றிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.
