/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி சாலையோர வியாபாரிகள் நிரந்தர இடம் கேட்டு முறையீடு
/
கும்மிடி சாலையோர வியாபாரிகள் நிரந்தர இடம் கேட்டு முறையீடு
கும்மிடி சாலையோர வியாபாரிகள் நிரந்தர இடம் கேட்டு முறையீடு
கும்மிடி சாலையோர வியாபாரிகள் நிரந்தர இடம் கேட்டு முறையீடு
ADDED : நவ 19, 2024 07:19 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த 16ம் தேதி மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இதனால், நுாற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று சாலையோர வியாபாரிகளை அழைத்து எம்.எல்.ஏ., பேசினார்.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., அலுவலகம் முன், சாலையோர வியாபாரிகள், 80 பேர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பின், இரு தினங்களில் நிரந்தர இடம் தேர்வு செய்து தரப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்தார். இதையடுத்து, சாலையோர வியாபாரிகள் கலைந்து சென்றனர்.