/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதிய பேருந்து வசதியின்றி கும்மிடி மாணவர்கள் தவிப்பு
/
போதிய பேருந்து வசதியின்றி கும்மிடி மாணவர்கள் தவிப்பு
போதிய பேருந்து வசதியின்றி கும்மிடி மாணவர்கள் தவிப்பு
போதிய பேருந்து வசதியின்றி கும்மிடி மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:29 PM

கும்மிடிப்பூண்டி, பள்ளி நேரத்தில் போதிய அரசு பேருந்து வசதியின்றி, மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். கும்மிடிப்பூண்டி பகுதியில், பல ஆண்டுகளாக பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லை.
இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர், நிரம்பி வழியும் பேருந்து படிகளில் தொங்கியபடி செல்வதும், ஷேர் ஆட்டோக்களில் மூட்டைகள் போல் திணித்தபடி பயணிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
மேலும் பலர், தங்கள் கிராம பகுதிகளில் இருந்து டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டியில் பள்ளி நேரத்தில் போதிய அரசு பேருந்துகள் இயக்கி, மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.