/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஷேர் ஆட்டோக்களின் பிடியில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம்
/
ஷேர் ஆட்டோக்களின் பிடியில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம்
ஷேர் ஆட்டோக்களின் பிடியில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம்
ஷேர் ஆட்டோக்களின் பிடியில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம்
ADDED : மே 28, 2025 01:49 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நிலையத்தில் பேருந்துகள் உள்ளே சென்று வெளியே வரும் இடம் முழுதும், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்துகள் அனைத்தும் நிலையத்திற்குள் நுழைந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையத்தை முனையமாக கொண்ட பேருந்துகள் மட்டும் சிரமத்துடன் உள்ளே சென்று வருகின்றன. மற்ற பேருந்துகள் ஜி.என்.டி., சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருப்பது பேருந்து நிலையமா அல்லது ஷேர் ஆட்டோ நிலையமா என, பயணியர் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
பயணியர் நலன் கருதி, ஷேர் ஆட்டோக்களின் பிடியில் இருந்து பேருந்து நிலையத்தை மீட்க வேண்டும். பேருந்துகள் அனைத்தும் உள்ளே சென்றுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.