தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் கும்மிடிப்பூண்டி சார்நிலை கருவூலம்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் கும்மிடிப்பூண்டி சார்நிலை கருவூலம்

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் கும்மிடிப்பூண்டி சார்நிலை கருவூலம்


UPDATED : அக் 12, 2026 06:41 PM

ADDED : அக் 12, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:41 PM ADDED : அக் 12, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: பாழடைந்த, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கி வரும் கும்மிடிப்பூண்டி சார்நிலை கருவூலத்திற்கு, புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக வளாகத்தில், சார்நிலை கருவூலம் அமைந்துள்ளது. அந்த கட்டடம், 1992ம் ஆண்டு நிறுவப்பட்டது. 34 ஆண்டுகள் பழமையான கட்டடம், பாழடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இதனால், ஓய்வூதியம் தொடர்பான வேலை, முத்திரைத்தாள் பத்திரம் வாங்க வரும் மக்கள், கட்டடத்தின் நிலையை கண்டு அதிருப்தி அடைகின்றனர்.

அங்கு பணியில் உள்ள ஊழியர்களும், அச்சத்துடன் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

அவசர கால விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் அந்த கட்டடத்தில் இடம் பெறவில்லை.

மேலும், கருவூலத்தை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக பராமரிக்க தவறுவதால், செடி, கொடிகள் படந்துள்ளன.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து, சார்நிலை கருவூலத்திற்கு புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us