ADDED : ஏப் 17, 2025 09:24 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 20. இவருடைய நண்பரான பூண்டி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த லோகேஷ், 19, என்பவருடன், கடந்த 20ம் தேதி இரவு மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஜெகன் கத்தியால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் லோகேஷை வெட்டினார்.
இதில், லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார், ஜெகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், இவரது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க, கலெக்டர் பிரதாப்பிடம் பரிந்துரை செய்தார்.
இதுதொடர்பாக, நேற்று கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து, ஜெகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

