/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகருக்கு 'குண்டாஸ்'
/
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகருக்கு 'குண்டாஸ்'
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகருக்கு 'குண்டாஸ்'
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 27, 2025 02:31 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே தனியார் தொழிற் சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்தவர் விஸ்வநாதன், 50. இவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி என்னும் துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
இங்கு கடந்த 16ம் தேதி வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட வி.சி., கட்சியின் துணைச் செயலர் எஸ்.கே. குமார், 45 என்பவர் விஸ்வநாதனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து விஸ்வநாதன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த மணவாள நகர் போலீசார், அவரை கடந்த 17ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., விவேகானந்தா சுக்லா பரிந்துரைப்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், குண்டர் தடுப்பு சட்டத்தில் குமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை மணவாள நகர் போலீசார் நேற்று சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதையடுத்து, குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.