ADDED : செப் 20, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் உள்ள சத்தியவேடு சாலை சந்திப்பு கடைகளில், போலீசார் நேற்று குட்கா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது டீக்கடை ஒன்றில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் மதிப்பு 6,000 ரூபாய். டீக்கடை உரிமையாளரான கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த உஷாராணி, 50, என்பவரை போலீசார் கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.