ADDED : ஜன 27, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் வகையில், சோழவரம் காவல் ஆய்வாளர் கிளாஸ்டின்டேவிட், தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, சோழவரம் அடுத்த, காந்திநகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, சார்லஸ், 35, என்பவருக்கு சொந்தமான கடையில், சோதனை செய்தபோது, அங்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சார்லஸை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

