ADDED : டிச 03, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 15 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த சென்னை பார்க்டவுனைச் சேர்ந்த ரமேஷ்குமார், 43, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.