ADDED : ஜன 08, 2025 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை போலீசார், தமிழக - ஆந்திர எல்லையில் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த பாதசாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர், வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 600 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சத்யா, 35, என்பவர், கைது செய்யப்பட்டார்.