/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது
/
ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : பிப் 15, 2024 02:22 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - நாகலாபுரம் சாலையில், தமிழக -- ஆந்திர எல்லையில். ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த, 'பஜாஜ்' இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், 6 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் என்கிற பாபு, 53, என்பவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
நேற்று மதியம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்டிக் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் மகேஷிற்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், அபராதம் விதித்த கடைகளில் மீண்டும் குட்கா பொருட்கள் விற்றால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.

