ADDED : ஜன 10, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீசார், நேற்று, தமிழக - ஆந்திர எல்லையான அண்ணாநகர் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஒருவரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்தனர்.
அவர், ஸ்ரீபெரும்புதுார் ஜெயா செந்தில்நாதன், 40, என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 10 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதை பறிமுதல் செய்த போலீசார் ஜெயா செந்தில்நாதனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.