ADDED : மார் 18, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் சத்தியவேடு சாலையில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடில் இருந்து, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நிறுத்தி சோதனையிட்டனர்.
அவரிடம் 16 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையைச் சேர்ந்த ஷாஜகான், 52, என்பவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.