ADDED : நவ 15, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடைகளில் குட்கா சப்ளை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, கண்ணம்பாக்கம் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பாதிரிவேடு போலீசார் மேற்கொண்ட சோதனையில், கடைகளில் குட்கா சப்ளை செய்த ஆந்திர மாநிலம், தடா அருகே மத்தளமேடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்யா, 63, என்பவரை கைது செய்தனர்.
விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்துடன், 1.50 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

