/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்
/
மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்
ADDED : நவ 15, 2025 10:11 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த 'எர்டிகா' காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில், 15 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அரக்கோணம் தாலுகா கல்வாரிகண்டிகையைச் சேர்ந்த ஹரிபிரசாத், 27, என தெரிய வந்தது. ஹரி பிரசாத்தை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 58, என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தார். அவரை, திருத்தணி போலீசார் கைது செய்தனர்.

