/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாதவரம் - நல்லுார் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
/
மாதவரம் - நல்லுார் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
மாதவரம் - நல்லுார் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
மாதவரம் - நல்லுார் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 19, 2024 01:33 AM

சென்னை:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் - நல்லுார் இடையில் 10.5 கி.மீ., சாலை உள்ளது.
இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்கு, செங்குன்றம் அருகே நல்லுார் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலை வழியாக சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு, அதிகளவில் சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆந்திராவின் திருப்பதி, காளஹஸ்தி, நெல்லுார், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவையும் செல்கின்றன.
நல்லுார் சுங்கச்சாவடியில் தினமும் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
மாதவரம் ரவுண்டானா முதல் தடா வரை ஆறு வழிச்சாலை அமைப்பதற்கு 2009ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், நல்லுார் - தடா வரை சாலை அமைக்கும் பணிகள், இப்போதுதான் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. கவரப்பேட்டையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன.
மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு தராததால், மாதவரம் ரவுண்டானா - நல்லுார் சுங்கச்சாவடி இடையே, ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இதற்கு மாற்றாக, உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.
ஆறு வழிச்சாலை அமைக்கப்படாததால், செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, சோத்துப்பாக்கம் சாலை, வடகரை - மாதவரம் நெடுஞ்சாலை, காவாங்கரை, புழல் மத்திய சிறை, கதிர்வேடு சாலை, மாதவரம் 100 அடி சாலை சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பண்டிகை காலங்களில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி திணறுகின்றன. தற்போது, மாதவரம் - நல்லுார் இடையே, சாலை புதுப்பிப்பு மற்றும் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன.
இப்பணிகள் நிறைவு பெற்றதும், டிச., மாத இறுதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம், மாதவரம் - நல்லுார் சாலை பராமரிப்பு பணியை ஒப்படைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
நல்லுார் சுங்கச்சாவடி முதல் கோல்கட்டா வரை கட்டண சாலையாக, இதை வழக்கம்போல, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கவுள்ளது.