/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே வேலை கிடைக்காதோர் வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
/
ரயில்வே வேலை கிடைக்காதோர் வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
ரயில்வே வேலை கிடைக்காதோர் வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
ரயில்வே வேலை கிடைக்காதோர் வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
ADDED : மார் 12, 2024 05:26 AM

திருவள்ளூர், : ரயில்வே துறையில் பணி வாய்ப்பு கிடைக்காதோர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்காளர் அட்டை ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ரயில்வே துறையில், 'அப்ரன்டீஸ்' பயிற்சி முடித்து, பணி கிடைக்காதோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, வாக்காளர் அட்டை ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ரயில்வே துறையில், 'ஆக்ட் அப்ரன்டீஸ்' பயிற்சி முடித்து, 25 ஆண்டுகளாகியும் எங்களுக்கு, இதுவரை பணி நியமனம் வழங்கப்ப எங்களுக்கு இணையான காலத்தில், பயிற்சி முடித்த வடமாநில இளைஞர்களுக்கு மட்டும், 2020ல் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் பயிற்சி பெற்ற, 17,000 பேர் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து, வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

