ADDED : செப் 11, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணியில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்ததால், ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், மூன்று நாட்களாக காலை 8:00 மணி - மாலை 5:30 மணி வரை வெயில் கொளுத்தியது. நேற்றும் வெயில் கொளுத்தியதால், மக்கள் வெளியே நடமாடுவதற்கு அச்சப்பட்டனர். சிலர் வீட்டிலேயே முடங்கினர்.
இந்நிலையில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை 4:00 மணி முதல் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும், திருத்தணி ரயில் நிலைய நுழைவாயிலில் மழைநீர் தேங்கியதால் பயணியர் கடும் சிரமப்பட்டனர்.