/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கனமழை பொன்னேரியில் 20 செ.மீ., பதிவு
/
திருவள்ளூரில் கனமழை பொன்னேரியில் 20 செ.மீ., பதிவு
திருவள்ளூரில் கனமழை பொன்னேரியில் 20 செ.மீ., பதிவு
திருவள்ளூரில் கனமழை பொன்னேரியில் 20 செ.மீ., பதிவு
ADDED : டிச 03, 2025 06:00 AM
திருவள்ளூர்: 'டிட்வா' புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பொன்னேரியில் 20 செ.மீ., மழை பதிவாகியது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை, மழை நின்ற நிலையில், மதியம் முதல் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதானை சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதிப்பட்டனர். நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, பொன்னேரியில் 20.6 செ.மீ., மழை பதிவாகியது.
மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம்:
இடம்- மழையளவு(செ.மீ., )
பொன்னேரி-20.6
செங்குன்றம்-18.5
கும்மிடிப்பூண்டி-16.9
சோழவரம்-14.0
ஆவடி-9.2
திருவள்ளூர்-5.5
பூந்தமல்லி-5.5
தாமரைப்பாக்கம்-4.7
ஜமீன் கொரட்டூர்-3.8

