/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இடியுடன் பலத்த மழை திருத்தணியில் 13 செ.மீட்டர் பொழிவு

ADDED : ஆக 24, 2025 01:55 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவில் முன், மழைநீர் குளம் போல் தேங்கியது.
நெடுஞ்சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர். மாவட்டத்தில் திருத்தணி, சோழவரம் மற்றும் திருவள்ளூரில் 10 செ.மீ.,க்கும் மேல் மழை கொட்டித் தீர்த்ததால், அப்பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
l அதேபோல், திருத்தணியில் பெய்த பலத்த மழையால், பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
l மணவூர் ---- திருவாலங்காடு ரயில் நிலையம் இடையே உள்ள மருதவல்லிபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால், அப்பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
l ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.