/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காற்றுடன் பெய்த பலத்த மழை திருவள்ளூரில் சாலைகள் 'வெறிச்' திருவள்ளூரில் 'பெஞ்சல்' புயலின் ருத்ரதாண்டவம் படம் சீனிவாசன்

ADDED : நவ 30, 2024 08:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக, நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்ததால், குறைவான வாகனங்களால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தது.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள 'பெஞ்சல்' புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது. பலத்த காற்று வீசியதால், சாலையில் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாமல், வாகன ஓட்டிகள் திணறினர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட, அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடி காட்சியளித்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கினர்.
தொடர் மழையால் திருவள்ளூர் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக, பயணியர் சிரமப்பட்டு, சுரங்கப்பாதையை கடந்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4.5 செ.மீட்டர் மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி-3.2, தாமரைப்பாக்கம்-3.1, செங்குன்றம்-3.0, சோழவரம்-2.9, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி-2.0, பூண்டி-1.7, ஜமீன் கொரட்டூர்-1.5, திருவள்ளூர், ஆவடி-1.3 செ.மீட்டர் மழை பதிவாகியது