/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனமழையால் மூழ்கிய நெற்பயிர்கள், சாலைகள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் பாதிப்பு
/
கனமழையால் மூழ்கிய நெற்பயிர்கள், சாலைகள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் பாதிப்பு
கனமழையால் மூழ்கிய நெற்பயிர்கள், சாலைகள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் பாதிப்பு
கனமழையால் மூழ்கிய நெற்பயிர்கள், சாலைகள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் பாதிப்பு
ADDED : செப் 14, 2025 11:15 PM

- நமது நிருபர் குழு -
பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில், 14,000 ஏக்கரில் சொர்ணவாரி பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டிருந்தது.
தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று அதிகாலை பெய்த கனமழையால், நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி, நெற்கதிர்கள் சாய்ந்தன. இதனால், அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கவலை மழைநீர் வடிந்து, அறுவடை செய்வதற்குள் நெல் மணிகள் முளைத்துவிடும். எஞ்சியதை அறுவடை செய்தாலும் எதிர்பார்த்த மகசூலும், விலையும் கிடைக்காது. இதனால், ஏக்கருக்கு, 15,000 - 20,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் நேற்று அதிகாலை, 3:00 - 7:00 மணி வரை இடைவிடாமல் மழைபெய்தது. இப்பகுதியில், 6 செ.மீ., மழை பதிவானது.
கும்மிடிப்பூண்டி நகரத்திற்கு உட்பட்ட ரெட்டம்பேடு மாநில நெடுஞ் சாலையில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, 150 மீட்டர் தொலைவிற்கு குளம்போல் தேங்கியது. இதனால், பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கழிவுநீர் அதேபோல், கவரைப்பேட்டை பஜார் சாலையிலும், குளம்போல் மழைநீர் தேங்கியதை தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர் அதை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓபசமுத்திரம், தச்சூர் கூட்டுச்சாலை பகுதிகளில், மேம்பாலத்தின் கீழுள்ள இணைப்பு சாலைகளில், மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது. இதனால், வாகனங் கள் கடும் சிரமத்துடன் கடந்து சென்றன.
ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், போந்தவாக்கம், கச்சூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகள், பேருந்து நிலைய நுழைவாயில் மற்றும் உள்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் சாலையில் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.