/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் படை வீரர்கள் வாரிசுக்கு உதவி
/
முன்னாள் படை வீரர்கள் வாரிசுக்கு உதவி
ADDED : செப் 26, 2024 05:59 AM
திருவள்ளூர்,: தொழில்நுட்ப கல்வி பயிலும் முன்னாள் படை வீரர் வாரிசுகளுக்கு கல்வி நிதி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், புரபஷனல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் முன்னாள் படை வீரர் வாரிசுதாரர்களுக்கு 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கு, பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
எனவே, முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள், www.ksb.gov.in என்ற இணையதளத்தில், நவ., 30க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரம் பெற, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 2959 5311 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.