/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதருக்குள் மறைந்த பயணியர் நிழற்குடை
/
புதருக்குள் மறைந்த பயணியர் நிழற்குடை
ADDED : நவ 04, 2024 02:14 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையில், ஈகுவார்பாளையம் மேட்டில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் ஆகிய மூன்று திசைகளிலும் செல்லும் பேருந்து பயணியர் அங்கு காத்திருந்து பேருந்து பிடித்து செல்வது வழக்கம்.
அங்கு பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. அப்பகுதி முழுதும் புதர்கள் மண்டியிருப்பதால், புதருக்குள் பயணியர் நிழற்குடை மறைந்தது போல் காணப்படுகிறது. இதனால், பேருந்து பயணியர் அனைவரும், அதை பயன்படுத்த அஞ்சி, சாலை ஓரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த புதர்களை அகற்றி, நிழற்குடை பகுதியை முறையாக பராமரிக்க கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.