ADDED : பிப் 02, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, 6.31 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பொன்னேரி வட்டம், ஆரணி பிர்காவுக்கு உட்பட்ட அந்த இடத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் நிறுவ, 49.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடம் மற்றும் திட்ட வரை படத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நேற்று பார்வையிட்டார். திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
சில மாற்றங்களை செய்து புதிய வரைபடம் தயாரிக்க தேவையான ஆலோசனைகளை நீதிபதி வழங்கினார்.

