/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருநின்றவூர் கூவம் ஆற்றில் உயர்மட்ட பாலம்...விமோசனம்!! :நில எடுப்பு பணிக்கு ரூ. 21.3 கோடி நிதி ஒதுக்கீடு
/
திருநின்றவூர் கூவம் ஆற்றில் உயர்மட்ட பாலம்...விமோசனம்!! :நில எடுப்பு பணிக்கு ரூ. 21.3 கோடி நிதி ஒதுக்கீடு
திருநின்றவூர் கூவம் ஆற்றில் உயர்மட்ட பாலம்...விமோசனம்!! :நில எடுப்பு பணிக்கு ரூ. 21.3 கோடி நிதி ஒதுக்கீடு
திருநின்றவூர் கூவம் ஆற்றில் உயர்மட்ட பாலம்...விமோசனம்!! :நில எடுப்பு பணிக்கு ரூ. 21.3 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 18, 2025 02:22 AM

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் - திருநின்றவூர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நில எடுப்பு பணிக்கு 21.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமழிசை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது புதுசத்திரம். இங்கிருந்து கூவம் ஆற்றைக் கடந்து திருநின்றவூர் வழியாக ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணக்கும் வகையில் கடந்த 1950ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
புதுச்சத்திரத்தில் இருந்து வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார் பஸ், தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் உட்பட தினமும் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்றுவருகின்றன.
கடந்த 74 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலம் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து துண்டிக்கப்படும்.
இந்நிலையில் இந்த தரைப்பாலம் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின் ஒரு மாதத்திற்கு பின்13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 90 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் வாகனப் போக்குவரத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு அச்சத்துடன சென்று வருகின்றனர்.
மேலும் குறுகிய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் கடும் சிரமப்படும் நிலையும் ஏற்படும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு பெய்த கனமழையில் தரைபபாலத்தின் மீது வெள்ளநீர் சென்றதால் 15 தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் - திருநின்றவூர்இடையே புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதுச்சத்திரம் - திருநின்றவூர் கூவம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளோம். புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக ஜமீன்கொரட்டூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதியில் நிலம் கையகப்படுத்துவது மற்றும் நிலம் கையகப்படுத்தும் எல்லைகள் குறித்தும் அரசுக்கு தகவல் அளித்துள்ளோம். இதையடுத்து நில எடுப்பு பணிக்கு உத்தரவிட்டு 21.3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும் அங்கு உயர்மட்ட பாலம் 25 கோடி மதிப்பில் 15 மீட்டர் அகலத்தில், 198 மீட்டர் நீளத்தில் எட்டு பில்லர்களுடன் கட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
நில எடுப்பு பணிகள் முழுமை பெற்றவுடன் அரசு உத்தரவுக்குப்பின் புதிய மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.