/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்வைப்பு தொகை செலுத்தாததால் பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
/
முன்வைப்பு தொகை செலுத்தாததால் பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
முன்வைப்பு தொகை செலுத்தாததால் பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
முன்வைப்பு தொகை செலுத்தாததால் பயன்பாட்டிற்கு வராத உயர்கோபுர மின்விளக்கு
ADDED : ஜன 19, 2025 02:34 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சிக்கு செல்லும் வழியில் பொன்பாடி ரயில்வே கேட் உள்ளது. திருத்தணி மற்றும் திருப்பதி மார்க்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மத்துார் செல்வதற்கும் பொன்பாடி ரயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும்.
அதே போல, மத்துார், அலுமேலுமங்காபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி மக்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக, திருத்தணி செல்வதற்கு பொன்பாடி ரயில்வே கேட் வழியாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
ரயில்வே கேட் பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ரயில்வே கேட் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
ஆனால், மின்இணைப்பு வழங்காததால், 5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது.
இது குறித்து, திருத்தணி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொன்பாடி ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு, 86,000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை தொகை செலுத்தவில்லை. பணம் கட்டிய உடனே மின்இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

