/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அவசியம்
/
சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அவசியம்
சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அவசியம்
சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அவசியம்
ADDED : நவ 15, 2025 10:08 PM
ஊத்துக்கோட்டை: மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், அப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை -திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, ஒதப்பை, சதுரங்கப்பேட்டை, பூண்டி மற்றும் இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஊத்துக்கோட்டையில் இருந்து இச்சாலை மார்க்கம் வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, சீத்தஞ்சேரி கிராமம் சென்று, அங்குள்ள வன அலுவலகத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல், கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திராவின் பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல செங்குன்றம், பூச்சி அத்திப்பேடு, தாமரைப்பாக்கம், வெங்கல், சீத்தஞ்சேரி வழியே செல்கின்றனர்.
ஊத்துக்கோட்டையில்இருந்து திருவள்ளூர் செல்வோர், சீத்தஞ்சேரி வன அலுவலகம் வழியே செல்கின்றனர். வன அலுவலகம் ஒட்டி, மூன்று சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதி, இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது.
தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் நிலையில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

