/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ.1 கோடியில் பணி துவக்கம்
/
நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ.1 கோடியில் பணி துவக்கம்
நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ.1 கோடியில் பணி துவக்கம்
நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ.1 கோடியில் பணி துவக்கம்
ADDED : நவ 24, 2025 04:18 AM

திருத்தணி: திருத்தணி - அமீர்பேட்டை நெடுஞ்சாலையை 1 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை எதிரே, கார்த்திகேயபுரம் வழியாக அமீர்பேட்டை, குருவராஜப்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலை குறுகலாக இருப்பதாலும், செடிகள் வளர்ந்துள்ளதாலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி மாநில நெடுஞ்சாலை துறையினர், வாகன ஓட்டிகள் வசதிக்காக, திருத்தணி - அமீர்பேட்டை மாநில நெடுஞ்சாலையை, 1 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்ய, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணி துவங்கியுள்ளது.
இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.