/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயல்படாத சிக்னல்கள் மக்கள் வரிப்பணம் வீண்
/
செயல்படாத சிக்னல்கள் மக்கள் வரிப்பணம் வீண்
ADDED : நவ 24, 2025 04:17 AM

ஊத்துக்கோட்டை: நவ. 24-: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள், பயன்பாடின்றி உள்ளது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பெரியபாளையம் - தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அமைந்துள்ள வழித்தடத்தில், தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
இதனால், போக்குவரத்து சீராகும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட இடங்களில் அமைத்துள்ள சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

