/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டி முடித்து 15 ஆண்டுகளாச்சு! திறப்பு விழா காண்பது எப்போது?
/
கட்டி முடித்து 15 ஆண்டுகளாச்சு! திறப்பு விழா காண்பது எப்போது?
கட்டி முடித்து 15 ஆண்டுகளாச்சு! திறப்பு விழா காண்பது எப்போது?
கட்டி முடித்து 15 ஆண்டுகளாச்சு! திறப்பு விழா காண்பது எப்போது?
ADDED : நவ 24, 2025 04:17 AM

காவல்சேரி: காவல்சேரியில் கட்டி முடித்து 15 ஆண்டுகளாகியும், தற்போது வரை திறப்பு விழா காணாத கிராம சேவை மையம், செடிகள் வளர்ந்து சேதமடைந்து வருகிறது.
பூந்தமல்லி ஒன்றியம் காவல்சேரி கிராமத்தில், கடந்த 2010ல் 14.55 லட்சம் ரூபாயில் கிராம சேவை மையம் கட்டபட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
கிராம சேவை மைய கட்டடம் பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது.
அருகிலேயே ஊராட்சி அலுவலகம் இருந்தும், கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.