/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் சகதியாக மாறிய நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை
/
திருத்தணியில் சகதியாக மாறிய நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை
திருத்தணியில் சகதியாக மாறிய நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை
திருத்தணியில் சகதியாக மாறிய நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை
ADDED : டிச 09, 2024 02:22 AM

திருத்தணி:திருத்தணி பழைய சென்னை சாலையில், திருத்தணி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை உள்ளது. இந்த ஆய்வு மாளிகைக்கு, தமிழக முதல்வர் முதல் மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட அனைத்து துறை உயரதிகாரிகள் வந்து ஓய்வும், தங்கியும் செல்வர்.
அதே வளாகத்தில், நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவையும் உள்ளன.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை மற்றும் அலுவலக வளாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது சகதியாக மாறியுள்ளன. ஆய்வு மாளிகை மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகம் செல்லும் வழியில், மழைநீர் தேங்கி, சகதியாக மாறியுள்ளது.
'பெஞ்சல்' புயல் ஓய்ந்து, ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் மழைநீர் தேங்கியும், சாலை முழுதும் பாசி படர்ந்தும் உள்ளன.
எனவே, கலெக்டர் நேரில் பார்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.