/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமற்ற எம்.சாண்ட் வினியோகம் வீடுகட்டுவோர் அதிருப்தி
/
தரமற்ற எம்.சாண்ட் வினியோகம் வீடுகட்டுவோர் அதிருப்தி
தரமற்ற எம்.சாண்ட் வினியோகம் வீடுகட்டுவோர் அதிருப்தி
தரமற்ற எம்.சாண்ட் வினியோகம் வீடுகட்டுவோர் அதிருப்தி
ADDED : நவ 18, 2025 03:25 AM
திருவாலங்காடு: கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறும் சூழலில் தரமான எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுமானத்திற்கு முக்கிய தேவையாக மணல் உள்ளது.
தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்று மணல் அள்ளுவது தடை செய்யப்பட்ட சூழலில் எம்.சாண்ட் மற்றும் பி.சாண்டை பயன்படுத்தும் சூழல் உள்ளது.
பி.சாண்ட் என்பது பிளாஸ்டரிங் வேலைக்காக பயன்படுத்துவது. இது எம்.சாண்ட் போல் இல்லாமல் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
எம்.சாண்ட் என்பது உற்பத்தி செய்யப்படும் மணல். இது பி.சாண்டை விட சற்று தடிமனாக இருக்கும்.
இந்நிலையில் திருவாலங்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு 2,000 ரூபாய் வீதம் பெற்று வந்தனர்.
தற்போது 2,200 முதல் 2,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
திருவாலங்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6 யூனிட் கொண்ட எம்.சாண்ட் மணல் 36,000 ரூபாய்க்கும், பி.சாண்ட் மணல் 38,000 ரூபாய்க்கும் குவாரிகள் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடைகள் வாயிலாக விற்கப்படுகிறது.
தற்போது விற்பனை செய்யப்படும் எம்.சாண்டுடன் துாசி கலப்படம் அதிகம் உள்ளதால் கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் வீடு கட்டும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருத்தணி பள்ளிப்பட்டு குவாரிகளில் இருந்து வரும் பொருட்கள் தரமானதா என யாராலும் பார்க்க முடிவதில்லை. அரசு துறை அதிகாரிகளும் இதனை பரிசோதிப்பதில்லை.
எனவே துாசி கலப்படம் இல்லாத சுத்தமான எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் உள்ளிட்ட மணல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கட்டடப் பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

