/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.அக்ரஹாரத்தில் எரியாத மின்விளக்குகள்
/
எஸ்.அக்ரஹாரத்தில் எரியாத மின்விளக்குகள்
ADDED : நவ 18, 2025 03:25 AM
திருத்தணி: எஸ். அக்ரஹாரத்தில் ஒன்றரை மாதங்களாக தெரு மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், ஆறு தெருக்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து தெருக்களிலும், 70க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டள்ளன. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியத்தால், கடந்த ஒன்றரை மாதமாக தெரு மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருந்தது.
இதனால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாடுவதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தெரு மின்விளக்குகள் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

