/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்: வாலிபர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்: வாலிபர் கைது
ADDED : நவ 18, 2025 03:26 AM

திருவள்ளூர்: மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னை வாலிபரை மணவாளநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணவாளநகர் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் மணவாளநகர் பகுதியில் மெத்த ஆம் பெட்டமைன் கடத்தி வந்ததாக பெங்களூர் முனிஸ், 38, திருவண்ணாமலை, ஜாவேத், 40. சென்னையைச் சேர்ந்த பிரபல டான்சர் சிபிராஜ், 25, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் நம்பி, 42, மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த கபிதா யானிக்திஷிம்போ, 36 ஆகிய ஐவரை கைது செய்து 144 கிராம் மெத்த ஆம்பெட்டமைன் போதைப் பவுடரை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
பின் மைக்கேல் நம்பி கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு போலீசார் டில்லியில் பதுங்கியிருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான செனெகல் நாட்டைச் சேர்ந்த பெண்டே, 43 என்பவரை கடந்த 8 ம் தேதி கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் பெண்டே கொடுத்த தகவலின் பேரில் மணவாளநகர் போலீசார் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மதின் அகமது, 38 என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து அவரிடமிருந்து 55 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் 40 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பின் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

