/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் பாதையில் நின்று செல்பி எடுக்க கூடாது திருத்தணி ரயில்வே போலீசார் எச்சரிக்கை

ADDED : நவ 18, 2025 03:26 AM

திருத்தணி: ரயில் பாதையில் நின்று வீடியோ, செல்பி எடுக்கக் கூடாது, ரயில் பாதையில் விளையாட கூடாது என ரயில்வே போலீசார் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்தணி ரயில் நிலையம், தானியங்கி ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில், ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பதால் நடக்கும் விபத்துகள் தவிர்க்க, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ரயில்வே எஸ்.பி., ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பூபாலன் மற்றும் போலீசார் நேற்று திருத்தணி ரயில் நிலைய நடைமேடை, மேட்டுத்தெரு மற்றும் பஜார் கேட் ஆகிய இடங்களில்செயல்படும் தானியங்கி ரயில்வே கேட் பகுதிகளில்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, ரயில் கேட் மூடியிருக்கும் போது, தண்டவாள பாதையை கடந்து செல்லக்கூடாது, மொபைல் போன் பேசியவாறு ரயில் பாதையில் செல்லக்கூடாது, ரயில் பாதையில் நின்று வீடியோ, செல்பி எடுக்கக் கூடாது, ரயில் பாதையில் அமர்ந்து மது குடிப்பது கூடாது.
ரயில் பாதையில் இறங்கி கடக்கக் கூடாது, தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.