/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 12:13 AM

திருத்தணி, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில் அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 40க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று, அரசு கலைக் கல்லுாரி நுழைவாயிலில் முன், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ஐந்து பெண் உட்பட 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நீதிமன்ற உத்தரவின்படி கவுரவ விரிவுரையாளர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம், 12 மாதங்களும் வழங்க வேண்டும்.
பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். குழு காப்பீட்டு திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.