/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகளுக்கு பழச்செடிகள் வழங்கிய தோட்டக்கலை துறை
/
விவசாயிகளுக்கு பழச்செடிகள் வழங்கிய தோட்டக்கலை துறை
விவசாயிகளுக்கு பழச்செடிகள் வழங்கிய தோட்டக்கலை துறை
விவசாயிகளுக்கு பழச்செடிகள் வழங்கிய தோட்டக்கலை துறை
ADDED : செப் 08, 2025 11:30 PM
திருத்தணி, தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு மூன்றாவது முறையாக நேற்று பழச்செடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியத்தில், 400க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி மற்றும் பழ வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, மக்களின் அன்றாட காய்கறி மற்றும் பழங்களின் சரிவிகித உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆறு வகையான காய்கறி விதைகள் மற்றும் மூன்று பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள், பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு மூன்றாவது முறையாக காய்கறி விதை மற்றும் பழச்செடி தொகுப்புகளை, நேற்று உதவி இயக்குனர் சரத் வழங்கினார்.
காய்கறி, பழச்செடிகள் தேவைப்படும் விவசாயிகள், ஆதார் கார்டு நகல் சமர்ப்பித்து, இலவசமாக பெற்று கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 86082 28276 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.