/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூமி பூஜையுடன் நிறுத்தப்பட்ட மருத்துவமனை பணிகள்
/
பூமி பூஜையுடன் நிறுத்தப்பட்ட மருத்துவமனை பணிகள்
ADDED : ஆக 20, 2025 02:26 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், கடந்த 1981ம் ஆண்டு அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு 73.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புறநோயாளிகளுக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற, 50 படுக்கைகள் உள்ளன.
இங்கு தினமும், 500 - 600 நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கு, ஆப்பரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மேலும், அதிகளவு நோயாளிகள் வரும்போது, படுக்கை வசதி பற்றாக்குறையாக உள்ளது .
இந்த மருத்துவமனைக்கு தேசிய சுகாதார பணிகள் சார்பில், 2.80 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், 29 படுக்கை அறைகள், ஆப்பரேஷன் தியேட்டர், கழிப்பறைகள் அமைய உள்ளன. ஓராண்டிற்குள் பணிகள் முடிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பூமி பூஜை நடந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும், தற்போது வரை அடுத்த கட்ட பணிகள் நடைபெறவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைக்காலம் துவங்கும் முன் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.