/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : செப் 02, 2025 12:21 AM
திருவள்ளூர் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர், கே.கே.ஆர். மில்லியணம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45. இவர், கடந்த 29ம் தேதி சிங்கபெருமாள் கோவிலில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3.5 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பாத்திரம், 47 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
திருவள்ளூர் நகர போலீசில் ஆனந்தன் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.