/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பங்களாமேடில் வீட்டுமனை பட்டா வழங்கல்
/
பங்களாமேடில் வீட்டுமனை பட்டா வழங்கல்
ADDED : பிப் 08, 2025 01:34 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், செருக்கனூர் ஊராட்சி, பங்களாமேடு இருளர் காலனியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்காததால் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன், அமைச்சர் நாசரிடம் பங்களாமேடு கிராமத்தினர் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, பங்களாமேடு இருளர் காலனியைச் சேர்ந்த 66 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
அப்போது சுடுகாடு, விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு வழங்கினர்.
நிகழ்ச்சியில், திருத்தணி தாசில்தார் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.