/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' 10 ஆண்டில் உருக்குலைந்த அரசு கட்டடம்

ADDED : நவ 28, 2025 03:21 AM

ஆர்.கே.பேட்டை: பராமரிப்பு இல்லாததால், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஸ்ரீவிலாசபுரம் கிராமம். இந்த கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம், 2015ம் ஆண்டு, 53,000 ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காணப்பட்டது.
ஒரு கான்கிரீட் கட்டடம், 20 முதல் 30 ஆண்டுகள் வரை உறுதியுடன் நீடித்து நிலைக்கும்.
ஆனால் இந்த கட்டடம் 10 ஆண்டுகளிலேயே வலுவிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. செங்கற்களும் உதிர்ந்து வருகின்றன. கான்கிரீட் துாண்களும் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் இந்த கட்டடத்தின் அருகில் நடமாடவே பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்த கட்டடத்தை தாண்டிதான் ரேஷன்கடை, அரசு தொடக்க பள்ளி, மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு அப்பகுதி மக்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, ஸ்ரீவிலாசபுரம் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.