/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய நிலத்தில் அறிவு நகரம் அமைத்தால் போராட்டம்: அன்புமணி
/
விவசாய நிலத்தில் அறிவு நகரம் அமைத்தால் போராட்டம்: அன்புமணி
விவசாய நிலத்தில் அறிவு நகரம் அமைத்தால் போராட்டம்: அன்புமணி
விவசாய நிலத்தில் அறிவு நகரம் அமைத்தால் போராட்டம்: அன்புமணி
ADDED : பிப் 17, 2025 11:15 PM
சென்னை'திருவள்ளூரில் விவசாய நிலத்தில் அறிவு நகரம் அமைத்தால், பா.ம.க., பெரும் போராட்டத்தை நடத்தும்' என, அக்கட்சி தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில், 1,703 ஏக்கரில், தமிழக அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிலங்களை கையகப்படுத்த, அங்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், 870 ஏக்கரில் அறிவு நகரம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, ஆரணி ஆற்றங்கரையில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் தரக்கூடிய நிலங்களை,ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு, அரசு பிடுங்க நினைப்பதை பா.ம.க., அனுமதிக்காது.
அப்பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான,556 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
அத்துடன் விவசாயிகளுக்கு சொந்தமான, 314 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா அல்லது மொத்தமாகவே விவசாயிகளின் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படுமா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
எப்படி இருந்தாலும், விளை நிலங்களில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூடஎடுக்க, பா.ம.க., அனுமதிக்காது. மீறி நிலம் எடுக்க தமிழக அரசு முயற்சித்தால், பா.ம.க.,பெரும் போராட்டத்தை நடத்தும்.
சேலம் இரும்பாலைக்கு சொந்தமான, 4,000 ஏக்கர் நிலத்திலோ,மதுரை, கோவையில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களிலோ அறிவு நகரத்தை,தமிழக அரசு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

